பத்தாம் வகுப்பு பள்ளித் தோழி உனக்களித்த கடிதம் கசக்கையில்
காதலியாகப் போகிறோமென உணர்ந்திருக்குமோ என் உள்மனம்
பத்து வயதில் பள்ளி முடித்து பிரிந்த நம் நட்பு பருவமடைந்தபின்
காதலாய் மலருமென அறிந்திருக்குமோ நம் பள்ளிக் கதவுகள்
பத்து ரூபாய் தாளொன்றில் நம் பெயரின் முன்னெழுத்துகள் எழுதி நீ நீட்ட
காதலிக்கு நீ தரும் பரிசென புரிந்திருக்குமோ அக்காகிதத்திற்கு
பத்து நிமிடம் நீடிக்கும் நம் ஊடல் முடிந்ததும் மூச்சுமுட்ட நீ முத்தமிட
காதலர்களென கண்பொத்திக்கொள்ளுமோ நம்மறை விளக்குகள்
பத்து முறை இதழ் முத்தமிட்டால் பத்து வருடம் நீளும் ஆயுளெனின்
காதலில் திளைத்துக் கிடந்தே முடிவிலியாகிப் போகுமோ நம்மாயுள்
பத்திலிருக்கும் சுழியமாய் உன் துயர் நீங்க வாழ்த்துகிறேன் பத்தாம் நாள்
காதல் கொண்டு நாம் வானை அளப்போமென !!!!!!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக