ஒன்பதுத் திங்கள் வித்தியாசம் நமக்குள் , நான் ஜனித்ததும் கருவில் நீ உருக்கொண்டாயோ ?
ஒன்பதாம் வகுப்பு முதல் என்னுள் எழும் ஹார்மோன்களின் கேள்விகளுக்கு
விடை நீதானோ ?
ஒன்பது மாதம் என் இருள்சூழ் கருவறையில் சிறையிருக்கப் போவது
உன்னுயிர்த் துளிதானோ ?
ஒன்பதாம் கோளாய் இருந்த நான் வீழ்ந்தின்று செயற்கைகோளாய் உனைச் சுற்றுவதேனோ ?
ஒன்பது துவாரங்களில் செவியிரண்டு மட்டும் உன் குரல் ரசித்திருக்க
என்னத்தவம் நோற்றதோ ?
தொண்ணூறு ஆண்டுகளானாலும் தோல்வியின்றி வாழ வாழ்த்துகிறேன் மார்ச்சின்
ஒன்பதாம் நாள் !! நாம் ஓராயிரம் ஆண்டுகள் பிணைந்திருப்போமென !!!!!!!!!
No comments:
Post a Comment