January 7, 2015

காதல் தோசை :)


சரவணபவனில் மேஜை வர நேரமாகும்  மசாலா தோசை

வசந்த பவனில் விரும்பி உண்ணும் காளான் தோசை

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளும் நெய் தோசை

இரவு உணவை  இனிமையாக்கும் பொடி தோசை

தொடுமுன் உடையும் முறுகலான ரவா தோசை

சாலையோரம் ரூசிகூட்டும் முட்டை தோசை

சிறுவயதை நினைவூட்டும் குட்டி தோசை

எதுவும் இப்பொழுது பிடிக்கவில்லை ......

சில நேரம் உப்பிட மறந்து

பல நேரம் தண்ணீர் அதிகம் கலந்து

வெகு நேரம் அடுப்பருகே காத்திருந்து

ஞாயிறு காலை என் கணவர் எனக்காக தயார் செய்து தரும்

காதல் தோசையைத் தவிர !!!!

ஞாயிறு தினமும் வராதோ ?