பிரிந்து விட்ட காதலர்களை நினைத்துப் பார்க்கிறது
பிணைத்து வைத்த கற்பலகை !
வலமிடமாய் கடக்கும் உயிர்வாழிகளை கண்டு நகைக்கிறது
குறுக்கும் நெடுக்குமாய் அடுக்கப்பட்ட தண்டவாள கற்கள் !காலத்தின் கரம்கொண்டு ஓடு விலக்கி வானம் வெறிக்கிறது
வெயிலிலும் மழையிலும் இருளில் வாடிய கட்டிடம் !ஆளில்லா நேரங்களின் அமைதியை ரசிக்கிறது
நெரிசல் விரும்பிகளின் அருகே வசிக்கும் நடைபாதை !அந்த நிமிடமும் வந்திடாதோ என எதிர்பார்த்து காத்திருக்கிறது
கவனிப்பாரற்று துருவேறி நிற்கும் விளக்கு கம்பம் !
நீ எடுத்த நிழல் படமாதலால் உனைப் போலவே இருக்கிறது
என்னால் புரிந்து கொள்ள இயலாததாய் !!!
என்னால் புரிந்து கொள்ள இயலாததாய் !!!
No comments:
Post a Comment