இரண்டாம் நாளும் நம் வருகையை எதிர்பார்த்திருந்த கடற்கரைக்கு
இரண்டு கரங்களாலும் என்னைப் பற்றி நாம் காதலர்களென தெரிவித்தாய் ...
இரண்டு பேரையும் அனிச்சையாய் வீழ்த்திய அந்த கடலலைக்கு
இரண்டு நொடியில்அணைத்து தாழ்கையிலும் பிரிவில்லையென உணர்த்தினாய் ...
இரண்டு விழியாலும் அளந்தவண்ணம் நீ என் அருகிலிருக்கையில்
இறந்திறந்து உயிர்க்கிறது என் நாணம் !!!
இருவரும் இணைந்திருக்க உன்னை தருவித்த மார்ச்சின்
இரண்டாம் நாள் வாழ்த்துகிறேன் !!!
இரண்டுவரிக் கவிதையாய் எப்பொழுதும் இணைந்திருப்போமென !!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக