December 27, 2010

போதும் !

உன் நிழல் நடந்த பாதைகளை நான் கடக்கும்
சிறு வரம் போதும் !
உன் விரல் நனைத்த மழையை நான் தீண்டும்
ஒரு கணம் போதும் !
உன் கால் தழுவிய அலைகளை நான் தொடும்
அந்த நிமிடம் போதும் !
உன் சுவாசம் சுமந்த காற்றை நான் உணரும்
சில நொடிகள் போதும் !
உன்னோடு வாழ்ந்ததாய் நான் எண்ணிக் கொள்ள..


No comments:

Post a Comment