December 4, 2010

பாறை

நீ பனியாய் உறைந்திருந்தால் நான் பாறையாக இருப்பேன் ........
என்னை மூடிக்கொள் ....
நீ அருவியாய் எழுந்திருந்தால் நான் பாறையாக இருப்பேன் .......
என்னை தழுவிக்கொள் ....
நீ நதியாய் நிறைந்திருந்தால் நான் பாறையாக இருப்பேன் .......
என்னை உரசிக்கொள் ...
நீ கடலாய் விரிந்திருந்தால் நான் பாறையாக இருப்பேன் .......
என்னை முத்தமிட்டுக்கொள்.....
நீ காற்றாய் கரைந்திருந்தால் நான் பாறையாக இருப்பேன் .......
என்னை மோதிக்கொள் .....
நீ உருக்கொண்டு மானுடனானால் நான் பாறையாக இருப்பேன் .......
என்னில் சாய்ந்துக்கொள் .....
உன்னுடைய ஒவ்வொரு உயிர்ப்பிலும் உன்னோடு உயிர்க்கத் துடிக்கும் பாறை பிரிதல்ல......
உன் காதல் கிடைக்காமல் இறுகிப்போன என் இதயம்தான் !!!!!

No comments:

Post a Comment