December 12, 2010

காதலன்

என் கனவுகளைச் செதுக்கினாய்
உன்னைச் சிற்பி என்றெண்ணினேன்......
என் இதயத்தைத் திருடிக் கொண்டாய்
உன்னைக் கள்வன் என்றெண்ணினேன் .....
என் கவிதைகளுக்கு உயிர் கொடுத்தாய்
உன்னைக் கவிஞன் என்றெண்ணினேன் ....
என் இரவுகளுக்கு ஒளியூட்டினாய்
உன்னைக் கலைஞன் என்றெண்ணினேன் ....
என் காதல் மட்டும் உனக்குப் புரிவதில்லை
ஆனாலும்
உன்னைக் காதலனாகவே எண்ணுகிறேன் !!!!!

No comments:

Post a Comment