அருகாமையில் நீ...
ஆட்தின்னும் உன் பார்வை ...
இதழ்கள் வருடும் உன் விரல்கள் ...
ஈரம் வற்றாத உன்னுடைய முத்தம் ...
உணர்வுகள் தூண்டும் உந்தன் வாசம் ...
ஊமையாகிப் போகும் எந்தன் வெட்கம் ...
என்னவென்று புரியாத எல்லையற்ற மோகம்...
ஏதேதோ எண்ணங்கள் தோன்றும் ஏகாந்த நேரம்...
ஐம்புலனிலும் நிறைந்து நிற்கும் உன்னுயிர்த் தாகம் ...
ஒன்றாகத் தவிக்கும் இருவேறு இதயங்களின் துடிப்பு...
ஓராயிரம் கனவுகளோடு உன்னை எதிர்நோக்கியிருக்கும் நான் ...
ஒளடதம் இல்லாத இந்த நோய்க்கு பெயர்தான் உயிர்க்காதலோ ?
No comments:
Post a Comment