வெள்ளிக் கிழமை அதிகாலையில்
அள்ளி முடிந்திருக்கும் குழலழகில்
கள்ளி உன்னிடம் நான் தொலைந்தேன் !
புள்ளி வைக்க வாசலில் இடம்தேடி
துள்ளி விளையாடும் விழியழகில்
வள்ளி உன்னிடம் எனை இழந்தேன் !
கிள்ளி முகரா மலர் நோக்கி
எள்ளி நகையாடும் இதழழகில்
தள்ளி நின்றும் நான் விழுந்தேன் !
No comments:
Post a Comment