என் கண்ணீர் உனக்கு பிடிக்கவில்லை என்றாயே ........
அடிக்கடி நீதான் என் முதலும் முடிவுமான உறவென்றாயே .......
நானுன்னை அழைக்கும் கணமெல்லாம் அலுவல் என்றாயே .......
ஒவ்வொருமுறை எனைப் பிரிகையிலும் வலிக்கிறது என்றாயே ........
நம் முதல் சந்திப்பில் கரம்பற்றிக் கொள்ளவா என்று வினவினாயே .......
எனக்கு முத்தமிட்ட பொழுது இதுதான் உ ன் முதல் முத்தம் என்றாயே ......
விரல் படுகையில் முதன் முறை ஒரு பெண்ணுடனான தீண்டல் என்றாயே ......
இவை யாவும் பொய்தானா ?
சில நாட்களில் உன் காதலும் பொய்க்குமோ ?
No comments:
Post a Comment