உன் பயணப்பையின் மீது ஆராக் கோபம்
எப்பொழுதும் உன் தோள்களில் தொற்றிக் கொள்கிறதே !!!
உன் மடிக்கணினியின் மீது பொய்க் கோபம்
எந்நேரமும் என்னிடங்கள் ஆக்கிரமித்துக் கொள்கிறதே !!!
உன் கைப்பேசியின் மீது தீராக் கோபம்
எனக்கான உன் முத்தங்களை முதலில் சுவைக்கிறதே !!!
உன் தலையணை மீது செல்லக் கோபம்
எனைப்பற்றி தூக்கத்தில் நீ உளற ஒட்டுக் கேட்கிறதே !!!
உன் தொடுதிரையின் மீது கடுங் கோபம்
எனைவிட அதிகமாய் உன் தீண்டல் பெறுகிறதே !!!
உன் கைக்கடிகாரத்தின் மீது சிறு கோபம்
என்வசம் நீயிருக்கையில் நேரத்தை நினைவூட்டுதே !!!
ஒவ்வொருமுறை கோபிக்கும் பொழுதும்
முத்தமொன்று நீ பரிசளிப்பதால்
கோபத்தின் எண்ணிக்கை முடிவிலியாய் நீள்கிறது !!!
No comments:
Post a Comment