இடைவெளிவிட்டு அமர்ந்து இமைகளால் மட்டும் பேசிக் கொள்ளும் ஒரு மலரும் காதல்
மணற்பரப்பில் நடந்துக் கொண்டே இடைத் தொட்டுச் செல்லும் ஒரு உல்லாசக் காதல்
குழந்தைகள் பத்தடி சென்றதும் விரல்களால் கோலமிடும் ஒரு அனுபவக்காதல்
வெட்ட வெயிலில் குடை ராட்டினமே குடையாய் விரிய ஒரு இளமைக்காதல்
ஒளியடங்கும் நேரம் எத்தனித்து முத்தமிட்டுக் கொள்ளும் ஒரு பள்ளிக் காதல்
கடலலையில் கால்நனைத்துக் கொண்டே காதலிக்கும் ஒரு கல்லூரிக் காதல்
ஓய்வெடுக்கும் படகின் ஓரம் ஓயாமல் காதல் புரியும் ஒரு புதுமணக் காதல்
அலுவல்கள் முடிந்ததும் தழுவல்கள் தொடரும் ஒரு அலுவலகக் காதல்
சுண்டலோடு காதலியின் இதழ்களையும் சுவைக்கும் ஒரு வீரியக்காதல்
காலாற நடந்துக் கொண்டே கரங்கள்பற்றிச் செல்லும் ஒரு முதிர் காதல்
என எங்கெங்கு காணினும் காதலடா ......
காதலர் மண்டலமாய் அறிவிக்கப்பட வேண்டிய மெரினா !!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக