கட்டுடலின் ரோமம் நினைவூட்டும் கம்பளி
கட்டியவிழ்த்ததால் மெருகேறி கிடக்கும் புடவை
கட்டியணைத்து உறங்கிய தலையணை
கட்டுக்கடங்காமல் கொண்டிருந்த காதல் வெறி
கட்டிலில் கருவாகிய வரியில்லா கவிதைகள்
கட்டுக்கதைகளால் நிறைந்திருந்த கடந்த காலம்
கட்டிவெல்லச் சிரிப்பில் கலந்திருக்கும் கவலை
கட்டுக்கட்டாய் குவிந்திருக்கும் வாழ்த்து மடல்கள்
கட்டிவைத்தாலும் கொட்டித்தீர்க்கும் மலரின்மணம்
கட்டுமரம் கண்முன் மறையும் கடற்கரை
கட்டியகுழலோடு சேராமல் தனித்தாடும் ஒற்றை முடி
என எதை நினைப்பினும் என் மனம்
கட்டுத்தறியாய் உன் நினைவை நெய்யத் தொடங்குதடா !!!
கட்டவிழ்த்ததும் உனை நோக்கி வருகின்றதே
என் மனமும் கன்றுதானோ ?
No comments:
Post a Comment