ஒரு வருட மென்பொருள் வேலை
ஒரு விதத்திலும் உடன்வரவில்லை -எனினும்
உள்ளத்திலிருந்து ஒதுக்கிவிட முடியவில்லை !!!
இரண்டு வருட காதல் காவியம்
இணைந்தும் இன்பம் இல்லை -எனினும்
இதயத்திலிருந்து நீக்கிவிட்டால் நானேயில்லை !!!
மருந்துக்கு கூட நிறைவேறவில்லை -எனினும்
மனதிலிருந்து தூக்கியெறிய மனமில்லை !!!
நான்கு வருட மின்னியல் உழைப்பு
நாளொன்றுக்கு கூட உதவவில்லை -எனினும்
நெஞ்சிலிருந்து அகற்ற தெரியவில்லை !!!
ஐந்து வருட ஆட்சிப்பணி விழைவு
வெற்றி இன்னும் விளங்கவில்லை -எனினும்
அடியோடு விட்டுத்தள்ளிவிட தைரியமில்லை !!!
என் கனவுகள் நிறைவேறுவதில்லையோ ? - இல்லை
நான் நிறைவேறும் கனவுகள் காண்பதில்லையோ ?
பகல்களை வெறுக்கிறேன் கனவுகள் துரத்துவதால் ...
இரவுகளை வெறுக்கிறேன் நினைவுகள் துரத்துவதால் ....
என்று நிற்குமோ இந்த ஓட்டம் !!!
வெற்றி பெறும் வரை குதிரை வேகத்தில் ஓட வேண்டும்,
ReplyDeleteவெற்றி பெற்ற பிறகு குதிரையை விட வேகமாக ஓட வேண்டும்...
இவ்ஓட்டம் (போராட்டம்) என்றுமே நிற்காது பொதுச்சேவகராகிய உங்களை போன்றோர்களுக்கு...