பலநாட்கள் உன்னோடு உரக்கச் சிரிக்கும்போதும்
சிலநாட்கள் உன்முன்னே உடைந்து அழும்போதும்
கண்ணீர் துடைக்கும் உன் விரல்களை விரும்புகிறேன்
என் கனவுகளை உனதாய் ஏற்று நிறைவேற்றவும்
எனக்காக நீ சேமித்த காதலை பரிமாறவும்
நீளும் உன் கரங்களின் மீது காதல் கொள்கிறேன்
பேருந்து பயணங்களில் உறங்கி கொள்ளவும்
சலனமுற்றிருந்தால் தலை சாய்த்துக்கொள்ளவும்
உதவும் உன் தோள்களின் மீது மையல் கொள்கிறேன்
என் நினைவுகள் நிரப்பிய இதயத்தை உள்ளேயும்
என் நெற்றிப்பொட்டை வெளியேயும் தாங்கும்
உன் மார்பின் மீது மோகம் கொள்கிறேன்
அழைக்கையில் விடுக்கும் அனிச்சை புன்னகையும்
ஆழமாய் விதைக்கும் ஆங்கில முத்தமும்
தெரிந்த இழல்களின் மேல் இச்சை கொள்கிறேன்
காதுமடல் பற்றியிழுக்கும் உன் பற்கள்
மூச்சினாலேயே கிறங்கடிக்கும் உன் மூக்கு
அரைகுறையாய் வளர்ந்த உன் மீசை
காந்தமாய் கவர்ந்திழுக்கும் உன் கண்கள்
உரசினால் பற்றிக்கொள்ளும் உன் கன்னம்
அடிக்கடி முத்தம் கேட்கும் உன் நெற்றி
நான் இறுகப் பற்றும் உன் தலைமுடி
என அங்கங்கள் தோறும் என் காதல் கொட்டிக்கிடக்கிறது
போதும்........
பாதி அங்கம் விவரிக்கவே வார்த்தைகளின் பஞ்சம் .......
அருமை...
பதிலளிநீக்கு