அணு ஆயுதங்கள் தேவையில்லை - அவளின்
அழுகை போதும் என்னைத் துகள்களாக்க !
அனுசரணைகள் தேவையில்லை - அவளின்
அழைப்பு போதும் என்னைக் குழைவாக்க !
அனுதினமும் பூச முகப்பூச்சு தேவையில்லை - அவளின்
அரைகுறை முத்தம் போதும் என்னை சிவப்பாக்க !
அனுகூலம் தரும் உறவுகள் தேவையில்லை - அவளின்
அம்மா எனும் குரல் போதும் என்னை மகிழ்விக்க !
அனுபவம் பெற்ற ஆசான் தேவையில்லை -அவளின்
அசாதாரண கேள்விகள் போதும் என்னை சிறப்பாக்க !
அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டி
குறுகத் தரித்தது குறள் மட்டுமல்ல அவளும்தான் !!!
என்னை மகிழ்விக்கும் மகள் !!!

அற்புதம்
ReplyDelete