7 ஜனவரி, 2018

பலாப்பிஞ்சு

வேர்ப்பலாவின் வாசத்திற்கு

          வேலிபோட வழியில்லை ......

தன்னையே கனியாக்கி

         மன்னவனை பிணியாக்கினாள் காதலரசி

கண்களையே சுளையாக்கி

          மண்மகனை ஈயாக்கினாள் ....

பருத்த பழமாய் வளர்ந்து 

           பெருத்த இன்பம் கண்டனரிருவரும்

கனிந்ததும் கொய்தனர் காம்புக்கும்

             கனிக்குமுள்ள காதலும்  உடைந்தது ......       

சுளையாய் வாழ்வு சுவையாகும் 

             நாளை என்றெண்ணி

பிஞ்சரிந்து செங்கரத்தால் சமைத்து

             நெஞ்சிணைந்தாள் கற்புக்கரசி

வேர்ப்பலாவின் வாடை

             வெடித்து வருவதைப்போல் வந்தது விதி

தோலாய் வந்த காலனால்

              நூலாய் ஆனால் பாவை ......

பிஞ்சிலே முடிந்த பலாவின்

               எதிர்காலம் போல்.இனிமையறியாமலே போனாள் ......
       
இம்மண்ணில் .....

பிஞ்சுகளை மொய்ப்பாரில்லை ....

சுளைகளை வைப்பாரில்லை .....






1 கருத்து: