நம்மிரண்டு இதயங்களும் இணைந்த
நாலைந்து வருடங்கள் பின்சென்று
நினைவில் நின்றிருக்கும் நிமிடமெல்லாம்
நீங்காமல் எண்ணி பார்க்கிறேன்
நுணுக்கங்கள் பல கையாண்டு
நூலிழையில் எனை உன்வசம் சாய்த்து
நெடியதொரு பெருமுத்தம் இழைத்து
நேற்றும் இன்றும் மறக்கச் செய்தாய்
நைல் நதியின் பெருக்கை மிஞ்சும் உன் வேகத்தால்
நொடிப் பொழுதும் நீங்காமல் காதல்
நோய் கொண்டு சுற்றினாய் -
இன்று காதலும் இல்லை நோதலும் இல்லை !!!
அடிக்கடி இயல்பை மாற்றி கொள்ளும் நீயும்
விந்தை மனிதன்தான் !!!
No comments:
Post a Comment