27 ஜூன், 2014

அந்த நாள் ஞாபகம் !



அழகாய் நீ நடக்க , ஆடைத் தீண்டி நான் சிலிர்க்க


இனிமையாய்த் தொடங்கியது இன்றைய சந்திப்பு ...


ஏதேதோ பேச நினைத்திருக்க


உன் குறுஞ்சிரிப்பில் அத்தனையும் மறந்தேன்


அடிக்கடி நீ என்னை ரசித்திருக்க


நானோ உன் விழி வீச்சில் தொலைந்து போனேன்


பழரசம் நீ ருசித்திருக்க


உன்னையும் ஒரு கோப்பையில் ஊற்றி அருந்திட விழைந்தேன்


சாக்லேட் நீ சுவைத்திருக்க


நானும் அதுவாய் உன் கையில் மாறிவிட வேண்டிக்கொண்டேன்

என்று நிகழுமோ மீண்டும் நம் சந்திப்பு !!!!


காதலர்களாக .....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக