June 27, 2014

புள்ளியாய்.....

புள்ளியாய் எனக்குள் தொடங்கி வானமாய் விரிந்துவிட்ட உன் காதலில் நான் திளைத்து...

முதல் அழைப்பில் கோபிக்கிறேன்

இரண்டாம் அழைப்பில் உன்னைக் கோபித்ததால் எனையே வெறுக்கிறேன் ...

மூன்று நிமிடம் கூட உன்னை நினைக்க மறப்பதில்லை .. ஆனால்

நான்கு மணி நேரம் அலைபேசி அணைத்து வைக்கிறேன் ...

ஐம்புலன்களாலும் உன்னை அணைக்க ஏங்குகிறேன் ....சமயங்களில்

ஆறாம் அறிவிழந்து உன் மேல் ஊடிக் கலங்குகிறேன் ...சில நேரம்

ஏழு வண்ணக் கனவுகளில் உன்னுடன் இணைகிறேன் ...

இன்னும் ஏதேதோ உளறத் தோன்றுகிறது

ஆனால் அத்தனையும் உன் மேல் நான் கொண்ட அளவில்லா காதலால்

என்றென்றும் உன்னை பிரியாமல் இருக்கும் வரம் வேண்டி காத்திருக்கிறேன்.....

No comments:

Post a Comment