உன்னருகில் கொஞ்சம் துரிதமாயும்
உன்பிரிவில் கொஞ்சம் மிதமாயும்
உனை ரசிக்கையில் கொஞ்சம் அகலமாயும்
உனை முறைக்கையில் கொஞ்சம் குறுகலாயும்
விரிந்து சுருங்கி நெகிழியாகிப் போனதென் இமைகள் !
உன் கூடல்களில் கொஞ்சம் வெப்பமாயும்
உன் ஊடல்களில் கொஞ்சம் குளிர்ந்தும்
வெந்து தணிந்து நெகிழியாகிப் போனதென் தேகம் !
நெகிழிகளின் பயன்பாட்டை வெளியே எதிர்க்கிறேன்
ஆனால் என்னுள்ளே வளர்க்கிறேன் !!!
No comments:
Post a Comment