நிலவொளியில் நான் நடந்து செல்ல கைகோத்துக் கொள்ளும் உன் நினைவுகளும் ..
காலையில் என்னை எழுப்பும் உனக்குப் பிடித்தப் பாடலின் அலார ஓசையும் ...
போர்வை வேண்டா இரவில் உன் குளிர்கரம் தேடும் என் கனவுகளும் ....
உன் பின்னூட்டங்கள் வேண்டி காத்திருக்கும் என் கவிதைகளும் ...
என் கைபேசியில் அழிக்க மனம் வராத உன் குறுஞ்செய்திகளும்...
மாலைநேரம் தேநீர் அருந்தும் நீ பரிசளித்த தேநீர் கோப்பையும் ..
இரவு நேரமொன்றில் நாம் ஒன்றாக நடந்து கடந்த பாதையும் ...
உன்னுடன் நானிருப்பதாக உணர்த்த...
No comments:
Post a Comment