November 23, 2010

பிரியாவிடை

உன்னை மறந்துவிட எண்ணி என் மனதிற்கு விடைகொடுத்தேன் !
என் காதலை எரித்துவிட எண்ணி என் எண்ணங்களுக்கு விடைகொடுத்தேன் !
உன்னில் உருவான நேசத்தை உதறிவிட எண்ணி என் உணர்வுகளுக்கு விடைகொடுத்தேன் !
என் கனவுகளைக் கலைத்துவிட எண்ணி என் கண்களுக்கு விடைகொடுத்தேன் !
உன் நினைவுகளை நீக்கிவிட எண்ணி என் கவிதைகளுக்கு விடைகொடுத்தேன் !
காதலுக்குக் கைக்கொடுத்த கருவியெல்லாம் காற்றில் கரைந்துவிட்ட பின் ........
இதயம் இல்லாத நான் இறுதி வரை எதற்காக?
என் உயிருக்கும் இன்றே விடை கொடுக்கிறேன் ................
நீ உரைத்தால் ..................

No comments:

Post a Comment